செங்கல் சூளைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்ககோரி கோவையில் நாதக ஆர்ப்பாட்டம்

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தடாகம் பள்ளத்தாக்கில் இயங்கும் செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாகவும், கனிம வள கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில், சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் அனைத்து செங்கல் சூளைகளையும் முடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட செங்கற்களை மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அபராதம் செலுத்தி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் 177 செங்கல் சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க வலியுறுத்தியும், அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூடக் கோரியும், யானை வழித்தடங்களில் உள்ள பள்ளங்களை மூட வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமதிவாணன் உட்பட மண்டல செயலாளர் அப்துல் வஹ்ஹாப், ஹிம்லர், ஸ்ரீராம், நர்மதா, கார்த்திகா, பெரியதனம் ராமச்சந்திரன், சின்னதுரை ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, தடாகம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து எந்த ஒரு அரசியல் அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...