கோத்தகிரியில் கால்நடைகளுக்கான ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை - படுகர் இனமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

கோத்தகிரி அருகேயுள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட பல்வேறு படுகர் இன மக்கள், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, உப்பு ஹட்டுவ பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.


நீலகிரி: கோத்தகிரியில் கால்நடைகள் நோயின்றி வாழ வேண்டி படுகர் இன மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் கிராம மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாடினர்.



அதையொட்டி, காலையில் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை தண்ணீரில் கரைத்தனர்.



பின்னர் அந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து சென்று மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.



இதையடுத்து, அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர்.

இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கையாகும்.

பின்னர், வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு படுகர் இன மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...