பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது புகார் - கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றோர் மனு!

பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் சுமார் 80 குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் இலவசமாக படித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு இதுவரை எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமாக ரூ.10,500 முதல் ரூ.15,500 வரை கட்டி வந்த நிலையில், அதற்கு எந்தவிதமான ரசீதும் இதுவரை கொடுக்கவில்லை என்றும், தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ரூ.25 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகம் நிர்ணயித்து தொகையை கட்ட நிர்பந்தம் செய்வதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து பேசிய பெற்றோர், சீருடை , புத்தகம், பிற கூடுதல் பயிற்சிக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்சியாக பள்ளி தரம் உயர்த்தப்படுவதால், இக்கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.

உடனடியாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். அரசு அறிவித்த கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவச கல்வி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...