திருப்பூரில் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

திருப்பூர் - தாராபுரம் இடையே உள்ள புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள், தடுப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் புதுரோடு அருகே சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகளை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி என் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது‌. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.



பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளை அகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மைய தடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...