கோவை-சென்னை இடையே வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி..! - சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி

தமிழகத்தில் முதல் முறையாக சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு காரணமான அனைத்து பணியாளர்களுக்கும் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள் என்று சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.



கோவை: சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று காலை 5:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையில் தொடங்கியது.5 மணி 40 நிமிடங்களில் அந்த ரயிலானது கோவையை வெற்றிகரமாக வந்தடைந்தது.



இந்த ரயிலில் சேலம் கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பயணித்து பரிசோதனை செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சேலம் கோட்டம்ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பேசியதாவது:

சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இந்த ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். இன்று அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயிலின் பயண நேரம் மற்றும் பராமரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.



இன்று காலை 5.30 மணி அளவில் சென்னையிலிருந்து கிளம்பிய இந்த ரயிலானது காலை 11.18 மணியளவில் கோவை வந்தடைந்துள்ளது. அட்டவணைப்படி இந்த ரயிலின் மொத்த பயண நேரம்6 மணி நேரம் ஆகும். அதன்படி, சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கோவை வந்தடைந்துள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததற்கு காரணமான அனைத்து பணியாளர்களுக்கும் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.



முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 536 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.



இந்த ரயில் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். தென் மண்டல அளவில் இரண்டாவது ரயில் சேவை இதுவாகும்.தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையாக இது உள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு, பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...