ஆவினில் வேலைவாங்கி தருவதாக மோசடி - கோவை ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

ஆவினின் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆவின் மேலாளரான சகாயம் என்பவரை ஆவின் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


கோவை: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் பேயோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் பணியில் இருந்த காலகட்டங்களில் வேலை நிமித்தமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு (ஆவின்) செல்வது வழக்கம்.

இதன் மூலம் அங்குள்ள அலுவலர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அதன்படி அந்த அலுவலகத்தில் இளநிலை செயலாளராக இருந்த ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், புதுக்கோட்டை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், ரூ.30 லட்சம் தந்தால் எனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.

அந்த சமயத்தில் ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும், மேலும் சிலரும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர். அவர்களின் பேச்சை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சம் வரை தந்தேன்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று, புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் எனது மகன் பிரசாந்த் பங்கு பெற்று எழுத்துத் தேர்வு எழுதினான். வேலைக்கான உத்தரவு வந்துவிடும் என்றனர்.

கொரோனா காலகட்டமாக இருந்ததால் தாமதம் ஆவதாக கூறினர். ஆனால் வேலைக்கான உத்தரவு வரவில்லை. இதையடுத்து நான் சம்பத்தப்பட்டவர்களிடம் பணத்தை திரும்ப கேட்க தொடங்கினேன். தற்போது வரை பணம் தரவில்லை. இந்த நிலையில் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்தால் கூலிப்படையை வைத்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.

இதனால் என்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இதன் பெயரில் கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய இளநிலை செயலாளர் ஐயப்பன், கோவை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொறியியல் பிரிவு துணை மேலாளர் சகாயம், கன்னியாகுமரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் பழனி, நாகர்கோயில் ராமவர்மபுரத்தைச் சார்ந்த சரஸ்வதி உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவின் மேலாளராக பணி பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்குப்பதியப்பட்ட நபர்களில் ஒருவரான சகாயம், கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார். ஆவின் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...