கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கான சிறப்பு நிழற்குடை - சிசிடிவி, ஏர்கூலர் வசதிகளுடன் திறப்பு

கோவையில் ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலருக்கு சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி, ஏர்கூலர் வசதிகளுடன் அமைக்கப்பட்ட நிழற்குடையை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.


கோவை: கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.



இந்த நிலையில், கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசருக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. வெயிலில் போலீசார் சோர்வு அடையாமல் இருக்க, இந்த நிழற்குடையில் ஏர் கூலர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.



அந்த நிழற்குடையில் சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்து போலீசார் மத்தியில் வரவேற்பைப்பெற்றது.



இந்நிலையில், புதிய நிழக்குடையை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் பேசியதாவது:



அதிகளவு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான சந்திப்பில் தற்போது ஒலிப்பெருக்கி, சிசிடிவி கேமராக்களுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவலரும் சிரமமின்றி 4 புறங்களிலும் தொடர்ந்து கண்காணிக்கவும், விபத்துகளை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

இதேபோல, மற்ற முக்கிய சந்திப்புகளில் நிழற்குடை அமைக்க உள்ளோம். கோடை காலம் என்பதால் காவலர்களுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இம்மாதிரியான நிழற்குடைகள் மூலம் காவலர்களும் பணியாற்ற எளிதாக இருக்கும்.

தற்போது சில இடங்களில் சாலை பணிகள் நடப்பதால் பணிகள் நிறைவடைந்தபின் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...