மேட்டுப்பாளையத்தில் ஆசை வார்த்தை கூறி 13வயது சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்ற கேரளாவைச் சேர்ந்த பீரவின் என்பவரை, சிறுமியின் உறவினர்கள் பிடித்து தாக்கினர். இதையறிந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் 13வயது சிறுமியை கடத்திய கேரள வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள புகை பரிசோதனை நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்து வந்தார். அப்போது பிரவீனுக்கு அருகே ஜூஸ் கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளரின் மகளான 13 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இது காதலாக மாறியது.நேற்று மாணவியை பிரவீன், சென்னைக்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, மதினா நகர் அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியை மீட்டனர்.
பின்னர் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீனை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.