சேலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மைப் பணிகள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய ரயில்வேயினால் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவுப் பணிகளின் ஒரு பகுதியாக இன்று (23.02.2017) சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



நிரங்காரி பாபா ஹர்தேவ் சிங் அவர்களின் 63-வது பிறந்த நாள் நினைவை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மைப் பணிகளில், சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் 45 தன்னார்வத் தொண்டர்கள் ரயில்வே ஊழியர்களுடன் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 



சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் உதவி சுகாதார அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தனர். 



இந்திய ரயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளில் சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் பங்களிப்பை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்தகு சிறப்பு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...