அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி - கோவையில் தாய், மகன் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் வரையில் மோசடி செய்த வழக்கில், மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்த மோகன்குமார், அவரது தாய் மணி என இருவரை கைது செய்தனர். இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(வயது27). இவர்கள், தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும், வேலைக்கான போலி ஆணைகளையும் தயார் செய்து பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்தள்ளனர். இதனை, கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோதுதான் அது போலியான ஆணை என்று தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை கொடுத்தவர்கள் அதனைத் திரும்பக் கேட்டும் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பணத்தின் மூலம் வேன் மற்றும் கார்களை வாங்கி மோகன்குமார் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த மோசடி குறித்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்தை பலரிடமும் வசூலித்து மோகன்குமாரிடம் கொடுத்ததாகவும் ,ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த மோசடி குறித்து மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மோகன்குமார், அவருடைய தாயார் மணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடைய மனைவி சோபனாவிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தாயும், மகனும் மேலும் பலரிடம் இதுபோன்ற மோசடியை அரங்கேற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, கைதான தாய், மகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...