பல்லடம் அருகே தென்னை கன்றுகளுக்கு ஆசிட் ஊற்றிய விவகாரம் - அதிகாரிகள் ஆய்வு

பல்லடம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய விவகாரம் தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிப் ஊற்றியவர்களை விரைவில் கைது செய்யக்கோரி விவசாயி வலியுறுத்தினார்.


திருப்பூர்: புதுப்பாளையம் ஊராட்சியில் ஆசிட் ஊற்றிய தென்னை மரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார்.

இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும், அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து கவின் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் கவின்குமார் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 40 தென்னங்கன்றுகளின் குருத்தில் ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்தினை கலந்து மர்ம நபர்கள் ஊற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



40 தென்னங்கன்றுகளும் முழுவதுமாக கருகி காய்ந்துள்ளதால் தென்னங்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு 40 தென்னங்கன்றுகளுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு பெற்று தரக் கோரியும், கவின்குமாரின்,பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் கவின் குமார் புகார் அளித்துள்ளார்.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் மற்றும் பொங்கலூர் வட்டார வேளாண் அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தென்னை மரங்களை மீண்டும் உயிர்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான ஆலோசனைகளை விவசாயிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னை மரத்தில் ஊற்றப்பட்டுள்ளது ஆசிட்டா? அல்லது களைக்கொல்லி மருந்தா? என்பது குறித்து எந்த ஆய்வும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும் வருவாய் துறை சார்பில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை எனவும் தென்னை மரங்களை அழித்தவர்கள் மீது நான்கு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி கவின்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...