கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு இன்று விமானம் மூலம் வந்தனர்.
அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தமிழக முதலமைச்சரை வரவேற்றார்.