கோவையில் 26 லட்சம் காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன..! - டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, பாட்டில்கள் திரும்ப பெறப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில், ஒரு வாரத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 26 லட்சத்திற்கும் அதிகமான மதுபாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக டாஸ்மாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும் 10 ரூபாய் கூடுதலாக பெறப்பட்ட அதற்கான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படும் எனவும்

பின்னர் வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபான பாட்டில்களை மதுபான கடைகளில் திருப்பிக் கொடுத்தால் பெறப்பட்ட 10 ரூபாய் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பத்து ரூபாய் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதே சமயம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளில் திரும்ப வழங்கிய நிலையில் 10 ரூபாய் திருப்பித் தரப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்த ஒரு வார காலத்தில் 26 லட்சத்து 96 ஆயிரத்து, 71 வாலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வடக்கு மண்டலத்தில் 166 மதுபான கடைகளில் 17,56,997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 12,91,506 மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 4,65,491 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெற்கு மண்டலத்தில் 139 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 19,24,708 மது பாட்டில்களில் 14,04,565 காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் 5,20,143 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...