கோவை அருகே ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு வீரவணக்கம்!

கோவை அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், வெலிங்டனில் உள்ள 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.



கோவை: நாட்டுக்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்பாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது, அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.



தனி மனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக, இந்திய அரசு 1996ஆம் ஆண்டு இவருக்கு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார்.



கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.



இந்நிலையில் அவரது நினைவிடத்தில் நடந்த 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான 25 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வீரவணக்கம் செலுத்தி பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...