உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்..! - சத்குரு அறிவுரை

கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், பாரம்பரியமான சிறுதானியங்களை நம்‌ உணவில்‌ சேர்த்துக்கொள்ள வேண்டும்‌ என வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், 'உலகத்தில்‌ உள்ள அனைத்து தமிழர்களுக்கும்‌ தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்‌. நம்‌ தமிழ்க்கலாச்சாரத்தில்‌, மண்ணை 'தாய்‌ மண்‌' எனச்‌ சொல்லுகிறோம்‌. ஏனெனில்‌, அந்தக் காலத்திலிருந்தே மண்‌ நம்‌ உயிருக்கு மூலமானது, நம்‌ தாய்‌ போல என்று உணர்ந்து, நாம்‌ பல்லாயிரம்‌ வருடங்களாக விவசாயம்‌ செய்து வருகிறோம்‌.

தமிழ்‌ மக்களுக்கு விவசாயத்தில்‌ மிகவும்‌ ஆழமான அனுபவம்‌ உள்ளது. அப்படி இருப்பினும்‌, கடந்த இருபது, முப்பது வருடங்களில்‌ நம்‌ மண்ணைக்‌ காப்பாற்றாமல்‌ விட்டுவிட்டோம்‌.

நம்‌ மணணைக்காக்க, நாம்‌ அனைவரும்‌ கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம்‌ உணவில்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, சிறுதானியங்கள்‌ வளரும்‌ இடத்தின்‌ மண்‌ வளமாகவே இருக்கும்‌. மேலும்‌, தமிழ்‌ என்பது வெறும்‌ மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை.

திறமை என்றால்‌ ஏதோ ஒரு செயல்‌ மட்டும்‌ இல்லை. நாம்‌ வாழும்‌ முறையிலேயே நம்‌ திறமை காட்டப்படவேண்டும்‌. நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌, இலக்கியத்தில்‌, எல்லா இடங்களிலும்‌, சித்தர்‌, சீடர்‌, யோகிகள்‌ என இருந்தனர்‌. உள்நிலையில்‌ எப்படி இருக்கிறோம்‌ என்பது முக்கியம்‌ என்பதால்‌, ஒரு ஊரை உருவாக்கும்‌ முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்‌.

பொருளாதாரம்‌, குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம்‌. நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும்‌ என்பதாலேயே, தமிழ்நாட்டின்‌ குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம்‌. இதுதான்‌ தமிழ்‌ கலாச்சாரம்‌. இந்த தமிழ்‌ புத்தாண்டில்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எனது ஆசியும்‌, வாழ்த்துக்களும்‌' எனக்‌ கூறியுள்ளார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....