கடும் விலை வீழ்ச்சியில் நேந்திரன் வாழைத்தார் - மேட்டுபாளையம் சந்தையில் விவசாயிகள் கவலை!

மேட்டுபாளைத்தில் உள்ள வாழை சந்தைக்கு அன்னூர், புளியம்பட்டி, காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைத்தார்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இன்று சந்தைக்கு வந்த நேந்திரன் வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கால்நடைக்கு உணவாக வைத்தனர்.


கோவை: நேந்திரன் வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு விவசாயிகள் உணவாக வைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதனை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வது வழக்கம். இம்மையத்தில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி, பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது. மேலும் பூவன் ரூ.500 வரையும், தேன் வாழை ரூ.600, ரஸ்தாளி ரூ.400, ரோபஸ்டா ரூ.400, செவ்வாழை ரூ.600 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.35 வரை விற்பனையான நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனிடையே நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது. இதனால விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் நெல்லை, திருச்சி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள வியாபாரிகள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் விலை பேசி எடுத்துச் செல்கின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கேரளா வியாபாரிகள் வருவதே இல்லை. இதனால் நேந்திரன் வாழைத்தாரின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...