கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் 24.02.2017 மற்றும் 25.02.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. புகைப்படக்கண்காட்சியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும், இந்தப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள புகைப்படங்களும் மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா குறித்த புகைப்படங்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுளளன. இக்கண்காட்சியினை பொது மக்கள் பார்த்து அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் பயன்பெரும் வகையில் உள்ளது.
இக்கண்காட்சி பணியினை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.