ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ராமநாதபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கோவை ராமநாதபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



INTUC கோவை மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



இதில் சிலர் ராகுல் காந்தியின் முகமூடியை அணிந்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் வட்ட தலைவர், கணேசன், பார்த்திபன், காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...