கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 85-ல் அசோக் நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான வளாகம் சொத்து வரி செலுத்தாததால் இன்று (25.02.2017) குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 85-ல் அசோக் நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான வளாகம் சொத்து வரி ரூ.2,55,570- செலுத்தாததால் அந்த தனியாருக்கு சொந்தமான வளாகத்திற்கு செல்லும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.