கோவையில் நாளை (ஏப்.18) மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.


கோவை: கோவையில் நாளைய தினம் (ஏப்ரல் 18) மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ நாளை (18.04.2023) காலை 11.00 மணி முதல்‌ நண்பகல்‌ 1.00 மணி வரை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம்‌ அளித்து பயன்பெறலாம்‌.

மேலும்‌, இந்த கோரிக்கை மனுக்களின்‌ மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, தனி மனித இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...