கோவை அருகே கத்தியால் குத்தி இளைஞர் கொலை - போலீசார் தீவிர விசாரணை

கோவை குனியமுத்தூரை சேர்ந்த ரகுமத்துல்லா எனும் இளைஞர், நண்பருடன் செல்வபுரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், ரகுமத்துல்லாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுமத்துல்லா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குனியமுத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவா் ரகுமத்துல்லா (வயது 25).

இவர் தனது நண்பர் ஒருவருடன், செல்வபுரம் தில்லை நகருக்கு சென்றார். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த சிலர் திடீரென ரகுமத்துல்லாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.



இதில், படுகாயமடைந்த ரகுமத்துல்லா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரைமீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரகுமத்துல்லா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடம் டாஸ்மாக் மதுக்கடை அருகே என்பது தெரியவந்தது. இதனால் மது போதையில் யாராவது கத்தியால் குத்திக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...