பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை சார் ஆட்சியர் பிரியாங்காவிடம் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பத்து கிராமங்களில் இருக்கும் மொத்த கழிவு நீரும் அருகில் இருக்கும் பல ஏக்கர் விளை நிலத்தில் தேங்கி நிற்பதால் கிணற்று நீர் மாசடைவதாகவும், கால்நடைகள் நோய்வாய்படுவதாகவும், அங்கு உள்ள தென்னை மரங்கள் பட்டுபோவதாகவும், அருகில் உள்ள கிராம மக்கள் வியாதிகளுக்கு உள்ளாவதாகவும் கூறி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முறை விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் மழை காலம் துவங்கினால் மீண்டும் விளை நிலத்தில் கழிவு நீர் புகுந்து சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இதை விசாரித்த சார் ஆட்சியர் பிரியங்கா போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...