கோவையில் சிறுதுளி அமைப்பின் சார்பில் பூமித்தாயின் நலன் காக்க சிறப்பு முகாம் - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

கோவையில் சிறுதுளி என்ற தனியார் அமைப்பின் சார்பில் இயற்கையின் ஆழத்தில் என்ற தலைப்பில் நடைபெற்ற Nurture Nature Camp 2023 என்ற 5 நாள் சிறப்பு முகாமில் கோவையில் உள்ள 18 பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் சிறுதுளி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு பள்ளிகளை ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



சிறுதுளி என்ற தனியார் தொண்டு அமைப்பானது, தனது 15 வது பதிப்பாக பூமித்தாயின் நலன் காக்க இயற்கையின் ஆழத்தில் என்ற தலைப்பில் Nurture Nature Camp 2023 என்ற முகாம் நடைபெற்று வருகிறது.



இந்த ஐந்து நாள் முகாமில் 18 பள்ளிகளை சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த முகாமானது, கடந்த 18 ஏப்ரல் 2023 அன்று VOC பூங்காவில் நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களால் நடப்பட்ட பச்சை நாயகி மரத்திற்கு அருகில் நடைபெற்ற தொடக்க விழாவில் வாழ்த்து பாடல் மற்றும் வருண காயத்ரி மந்திரத்துடன் முகாம் தொடங்கியது.

இந்த முகாமில், சிறுதுளியின் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர், சுஜானி பாலு வரவேற்புரை வழங்கினார்.



சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் வரவேற்புரையாற்றினார்.



இந்த நிகழ்வில், தலைமை விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். இதேபோல் முதன்மை கல்வி அதிகாரி சாய்கீதா கௌரவ விருந்தினராக பங்கேற்று உரையை வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில் மேற்கு கோயம்புத்தூரின் ரோட்டரி கிளப் தலைமை அதிகாரி RTN ஜம்பு குமார், Nurture Nature Camp-ன் திட்ட தலைவர் உமா கே ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...