கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ கைதி உயிரிழப்பு

போக்சோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கருமத்தம்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாதேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (58). கூலித்தொழிலாளி.

இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த சிறை காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு 9.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...