அன்னூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அக்சயா தாஸ்(46) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: அன்னூர் அருகே புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.



அதன் அடிப்படையில் இன்று (21.04.2023) அன்னூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் புதூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கோபிந்தா தாஸ் மகன் அக்சயா தாஸ் (46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...