ரமலான் பண்டிகை - மேட்டுப்பாளையத்தில் 10,000 இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் தொழுகை!

ரமலான் பண்டிகையை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ரமலான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.


கோவை: ரமலான் பண்டிகையை ஒட்டி கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலானை ஒட்டி இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார். வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி அப்துல் ஹமீது சிறப்பு பயான் உரையாற்றினார்.

பின்னர், தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...