கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைத்திட வலியுறுத்தி பிரச்சார பயணம்!

கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் கோவையில் ஒரு நாள் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் ஒரு நாள் பிரச்சார பயணம் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகம் முன்பு துவங்கப்பட்ட இந்த பிரச்சார பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.



இந்தப் பிரச்சார பயணத்தில் கோவை மாமன்ற தீர்மானத்தின்படி செஞ்சிலுவை சங்கம் அருகில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவசிலை அமைத்திட வேண்டும், அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். துப்புரவு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்து அரசு நிர்ணயிக்க கூடிய கூலியை கொடுத்திட வேண்டும்.

ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பொது தண்ணீர் தொட்டி பொது சுடுகாடு சமத்துவபுரம் என்ற நிலையினை உருவாக்கிட வேண்டும். அரசு பணியாளர் காலி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அனைவருக்கும் கிடைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசும் உறுதியளித்திட வேண்டும். தமிழகம் எங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலிகளை அகற்றி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.

இந்த பிரச்சார பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல அமைப்புச் செயலாளர் சு.சி.கலையரசன் ஒருங்கிணைத்தார். இதில் சி.பி.எம், ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை மாநகரில் இன்று மாலை வரை இந்த பிரச்சார பயணம் வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...