பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் மாமியாரை தாக்கிய மருமகன் - போலீசார் விசாரணை!

கோவை அடுத்துள்ள சமத்தூரைச் சேர்ந்த ஆனந்த குமார், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவருடன் ஏற்பட்ட தகராறால், கோபித்துக் கொண்டு மனைவி, தன்னுடையை தாயார் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற ஆனந்தகுமார், மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை பாட்டிலால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.


கோவை: ஆனைமலை அருகே மனைவியை தன்னுடன் அனுப்பாத மாமியாரை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே சமத்தூரை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது இளைய மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த குமார் (33) என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த அவரது மனைவி 15 நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று ஆனந்த குமார் குடிபோதையில் அவரது மனைவி வீட்டிற்கு சென்றார். இதையடுத்து ஆனந்தகுமார் மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புங்கள் என கூறியுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, ஆனந்தகுமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கத்தினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து அவர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஆனந்த குமாரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...