கிணத்துக்கடவு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் - மகளை அடித்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்!

கோவை கிணத்துக்கடவு அருகே குடும்பத்தகராறில் மாமியார் உட்பட இருவரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு இளைஞர் தப்பியோடினார். பொள்ளாச்சி பகுதியில் தலைமறைவாக இருந்த கூலித்தொழிலாளியான ஆறுமுகத்தை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூரை சேர்ந்தவர் நல்லுசாமி இவரது மனைவி காமாட்சி. நல்லுசாமி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜோதிமணி (வயது27) என்ற மகள் உள்ளார். மகள் ஜோதிமணியை பழனி சேர்ந்த ஆறுமுகம் (வயது27) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும் காமாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், பழனியில் இருந்த ஜோதிமணி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதிமணியை தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட ஜோதிமணி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜோதிமணியை அழைத்துச் செல்ல ஆறுமுகம் கிணத்துக்கடவில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஜோதிமணியை தாக்கியது குறித்து அவரது தாய் காமாட்சி, ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சியை குத்தி உள்ளார்.

தடுக்குச் சென்ற வீட்டு உரிமையாளர் ஈஸ்வரனையும், ஆறுமுகம் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பொள்ளாச்சி அருகே பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கிணத்துக்கடவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமியார் உட்பட இருவரை மருமகனே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...