மது குடிப்பதற்கான சிறப்பு அனுமதி அரசாணை - தமிழக அரசு திரும்பப்பெற டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெறகோரி மே.1 ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்குக்கு கையெழுத்து இடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. அதேபோல டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருகிறது.

இந்த சூழலில் தமிழக அரசு அரசாணையில் திருமண மண்டபங்களில் முன்அனுமதி உடன் மதுக்கள் பரிமாறலாம் என வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாலை சரத்துக்கள் மாற்றி மீண்டும் வெளியாகியது. இது மது விலக்குக்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் கடைகளை குறைக்க முயன்றனர். நேற்று வெளியாகிய அரசாணை தமிழக மக்களுக்கு எதிரானது. நேற்றைய அரசாணையை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த அரசாணை சர்வதேச அரங்கில் விளையாட்டுக்கு பதிலாக மது ஆசையை தூண்டிவிடுவதற்கு ஏதுவாக உள்ளது.12 மணி நேர வேலை தொடர்பாக சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெற வேண்டும். சாதிய சிக்கல்களில் இருந்து வெளியே முன்னேறி சென்றவர்களை மீண்டும் தலித் பட்டியலுக்குள் அடைப்பது அம்மக்களுக்கு எதிரானது.

தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு ஒட்டுமொத்தத்தில் குழப்பத்தில் உள்ளது போல், தடுமாற்றத்தில் உள்ளது. ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பிவிட்டு குறை சொல்வார்கள். அரசு தடுமாறி அரசாணை வெளியிடுகிறது.

டாஸ்மாக்குக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படையாக கண்டிக்க முன்வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து மே மாதம் பத்தாம் தேதி சென்னையில் நடைபெறும் டாஸ்மாக்குக்கு எதிரான பேரணியில் ஒத்துழைக்க வேண்டும்.

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே ஒன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துகிறோம். அதேபோல ஜி-ஸ்கொயர், அதிகாரம் பெற்றவர்களின் ஆதரவோடும், அரசு ஆதரவோடும் செயல்படுகிறது.

இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...