கோடநாடு கொள்ளை வழக்கு - கனகராஜ் குடும்ப ஜோசியரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான உயிரிழந்த சேலம் கனகராஜ், இறுதியாக குடும்பத்துடன் சந்தித்த ஜோசியரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவருக்கு வரும் மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.


கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோரிடம் மறுவிசாரணை நடைபெற்றது.

2017ல் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேசி தொலைப்பேசி பதிவுகளை சேகரித்துள்ளனர். அன்மையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பாதுகபாப்பு அதிகாரியான கனகராஜ் அடிக்கடி சேலம் கனகராஜிடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இந்நிலையில் கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான விபத்தில் உயிரிழந்த சேலம் கனகராஜ்,



உயிரிழக்கும் முன் குடும்பத்துடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடரை சந்தித்ததாகவும், அப்போது கண்டம் உள்ளதால் இன்று ஒரு நாள் தப்பித்துவிட்டால், பெரிய உயரத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர் கூறியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவருக்கு வரும் மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...