தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை - தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டம சோதாவை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவரை பணியில் இருந்தபோது, திட்டமிட்ட கொலைவெறி தாக்குதலால் உயிரிழந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்க வட்டத் தலைவர் குப்புராஜ்,தலைமையில் வட்ட செயலாளர் கனகராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மணல் கடத்தல் குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கும் புகார் அளித்த நிலையில், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் அரிவாளைக் கொண்டு தலை உடல், கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி துடிதுடித்து இறந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உயிர் நீத்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் மீதான இந்தத் தாக்குதலை, கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வருவாய் கிராம ஊழியர்களும் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல், ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும், சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும்,



பொது அமைதிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதி தாராபுரத்தை சேர்ந்த அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுத்துறை சங்கங்களும், துறை வாரி சங்கங்களும், பொதுமக்களும் முழு ஆதரவு அளித்து, அரசு ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் செய்து ஆணையாக வெளியிட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு நீதி கிடைத்திட ஆவண செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...