கோவை தடாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபப்ட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: தடாகம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நாயனார் மற்றும் காவலர்கள் சுரேந்திரன், முனி, ஜனா, கார்த்தி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளா லாட்டரிகளை விற்பனை செய்துகொண்டிருந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த மதன் என்பவரையும், பன்னிமடை பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.