உடுமலை அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் தீப்பிடித்ததில் பெண் பலியான சோகம்!

உடுமலை அடுத்த போடிபட்டி பகுதியில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வெஜினா (37) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் -வெஜினா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி வெஜினா சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த ஸ்டவ் தடுமாறி கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் தீ வெஜினா மீது பற்றிய நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே தீக்காயங்களுடன் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெஜினா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...