ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் - கோவையில் நடிகர் பிரபு பேச்சு!


மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போது அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரபு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய  அரசு கூறிவருகிறது. அப்படி பாதிப்பு இல்லை என்ற நிலையில் அறிவியல் ஆய்வாளர்களை வைத்து அவர்களுக்கு திட்டம் குறித்து முழுமையாக விளக்கமளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற நிலை இருப்பின் அதை அரசு கவனத்திற்க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர்கள் ஆதரவு தருவோம்.

நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை வெளியில் வந்து சொன்னது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்து வருகிறது. மக்கள் தான் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்மகன் தான் பெண்களுக்கு பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...