மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போது அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு கூறிவருகிறது. அப்படி பாதிப்பு இல்லை என்ற நிலையில் அறிவியல் ஆய்வாளர்களை வைத்து அவர்களுக்கு திட்டம் குறித்து முழுமையாக விளக்கமளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற நிலை இருப்பின் அதை அரசு கவனத்திற்க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர்கள் ஆதரவு தருவோம்.
நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை வெளியில் வந்து சொன்னது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்து வருகிறது. மக்கள் தான் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்மகன் தான் பெண்களுக்கு பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறினார்.