தாராபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாக புகார் - பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கொடுக்கப்பட்ட குழந்தை தங்களுடையது அல்ல என பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர், இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான அபினவ் என்பவரின் மனைவி கீதா பிரசவத்திற்காக நேற்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தது.



பின்னர் அக்குழந்தையை புதைப்பதற்காக அரசு ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துசெல்லப்பட்ட சிறிது நேரத்தில், குழந்தையை எடுத்து சென்றவர்கள், அதைப் புதைக்காமல் மருத்துவமனைக்கு திரும்பி வந்து மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை செய்தபொழுது, பிறந்த குழந்தையை மாற்றிவிட்டதாகவும், உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ.பரிசோதனை செய்யவேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...