நாளை நடக்கவிருக்கும் கோவை புகழ் கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
புதிதாய் கட்டப்பட்டுள்ள கோனியம்மன் திருக்கோயில் ராஜகோபுரமானது முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

இன்று இரவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆன்மீக சிறப்புரை மற்றும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து வந்துள்ளனர்.

பச்சை பட்டு உடுத்தி, பாரம்பரிய நகைகள் மற்றும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு மேல தாளத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கோனியம்மன் கோவிலில் உள்ள திருவிழா கோடி கம்பத்திற்கு மஞ்சள் கலந்த புனித நீரையுற்றி பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபட்டுவருகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் காவல் படையினர் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோவில் மற்றும் தேர் திருவிழா நடக்கவிருக்கும் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றங்கள் மதியத்திலிருந்து இரவு வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
