நாடு முழுவதும் இன்றைய தினம் நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஏழு மையங்களில் சுமார் 4'000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் நடைபெற்று வரும் நீட் தேர்வில் சுமார் 4000 தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்றைய தினம் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏவிபி கலை அறிவியல் கல்லூரி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, திருப்பூர் ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, காங்கயம் சாலை அபாகஸ் மாண்டிசோரி இண்டர்நேஷனல் பள்ளி, கூலிபாளையம் வித்யாசாகர் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, அவிநாசி ஏகேஆர் அகாடமி பள்ளி ஆகிய 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வில் அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 465 தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். பெரிய தேர்வு மையங்களில் 800 பேர் வரையிலும், சிறிய தேர்வு மையங்களில் 400க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்கவுள்ள ழுத வரக்கூடிய மாணவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 12 மணி முதல் தேர்வு மையத்துக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையத்துக்கு வரக்கூடிய மாணவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு, புகைப்படம் ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் பேனா, பென்சில், ரப்பர் போன்றவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் மாணவிகள் செயின், தோடு, தலைமுடி கிளிப், கொலுசு, ஷால் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதேபோல் மாணவர்கள் அரை கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வந்த மாணவர்கள் பலத்த சோதனைக்கு பின்பு தேர்வு மையத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.