உதகை நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் - திமுக எம்.பி ஆ.ராசா வழங்கினார்!

உதகையில் நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


நீலகிரி: உதகை நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நீலகிரி எம்.பி ஆ.ராசா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகர திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள "திராவிட மாடல்" பாடலை கழக துணை பொதுச்செயலாளர் நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

இதில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராஜூ, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...