பிளஸ்-2 தேர்வு தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வரும் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 38 ஆயிரத்து 218 மாணவர்கள் எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 346 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். கோவை கல்வி மாவட்டத்தில் 72, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 95 தேர்வு மையங்களில் சுமார் 1800 தேர்வு அறைகளில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 303 பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
மேலும், பிளஸ்-2 தனித் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து மற்றும் தட்கலில் விண்ணப்பித்தவர்கள் என மொத்தம் 2273 தனித் தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.