போக்குவரத்து ஊழியர்களுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குக..! - திருப்பூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளம் தீர்மானம்!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான சம்பளம், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டு தோறும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொது குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு பின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பென்ஷன், அகவிலைப்படி,ஓய்வு கால பணப்பலன்களை பெற தொழிற்சங்கங்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அதிலும் 8 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள்இதுவரை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் அளித்ததை நிறைவேற்றி தர வேண்டும்,மின்வாரிய அரசு ஊழியர்களுக்கு போன்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பென்ஷன், ஓய்வு கால பணப்பலன், ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...