கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களின் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் இன்று (1.03.2017) வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 40-ல் அமர்நாத் வீதி, வார்டு 44-ல் அன்னையப்பன் வீதி மற்றும் வார்டு 43-ல் மீனாட்சி கார்டன் பகுதியில் உள்ள வரிதாரர்கள் நிலுவையில் சொத்து வரி செலுத்தக் கோரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருப்பினும், மேற்குறிப்பிட்ட வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் அந்த வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.