கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் - 122 மனுக்களுக்கு சுமூகத் தீர்வு

கோவை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், 126 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை நடத்தப்பட்டு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 126 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி, பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் மேற்பார்வையிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையிலும் இந்த குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.



அதன்படி, மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



அந்த வகையில், குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 126 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்படும், 2 மனுக்கள் மீது மனு ரசீதுகள்(CSR) பதிவு செய்யப்படும்,122 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.



பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...