ஊட்டியில் தரமற்ற உணவுப் பொருள் விற்பனை செய்த கடைக்கு அபராதம்!

ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதை பயன்படுத்தி தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


நீலகிரி: ஊட்டியில் தரம் அற்ற உணவுப் பொருள் விற்பனை செய்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனை தொடர்ந்து உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து உணவு தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டி கமர்சியல் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.

இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கூறிய உணவகங்கள் தங்கள் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து உணவகங்களும் தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும். சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது. உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், இறைச்சி கடைகளில் பொட்டலமிட நெகிழி பொருட்களை வேபயன்படுத்த கூடாது.

மேலும் தவறு செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...