சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - திருப்பூர் மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை

திருப்பூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி ஸ்ரீசா சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


திருப்பூர்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வீதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீசா500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை பாராட்டும் வகையில், பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இதேபோல் மாவட்ட அளவில் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஸ்ரீசா, பள்ளி நிர்வாகம் அளித்த முழு ஒத்துழைப்பின் காரணமாக தான் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடிக்க முடிந்ததாகவும், பள்ளி ஆசிரியர்கள் தனக்கு உதவிகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...