தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்டதில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது ஆட்சியருடன் மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.