கிணத்துக்கடவு அருகே தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உடல் மீட்பு!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் கார்த்திகேயன் (22). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் படித்து வந்தார். அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கல்லூரி விடுதியில் இருந்து முடி வெட்டுவதற்காக கிணத்துக்கடவிற்கு சென்றபோது அவரது கல்லூரி நண்பர்கள் ஜீவானந்தம், மாதவன், ஹரி,இளங்கோ உள்ளிட்ட 8 பேருடன் கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

தடுப்பணையில் அனைவரும் குளித்துவிட்டு திரும்பும்போது கார்த்திகேயன் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் வந்து தடுப்பனையில் கார்த்திகேயன் உடலை தேடினர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு தடுப்பணை தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்து போன கல்லூரி மாணவன் உடலில் காயம் இருந்ததால் மாணவன் கார்த்திகேயனின் தந்தை திருப்பதி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனுடன் குளிக்க சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...