கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (மே 16)மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் தெரிவித்தார்.

எனவே, இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.