கோத்தகிரியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரம் - விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை என கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரி பகுதி சுற்றுவட்டாரத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலி பிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர்.

இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

மேலும் தங்களது நிலத்தில் விளைந்த உருளை கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,

காய்கறி மண்டிகளில் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இதை நம்பி பெரும்பாலான விவசாயிகள் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை சாகுபடி செய்து வந்தோம்.

தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

அதாவது விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.32 மட்டுமே கிடைக்கிறது. மேலும் நல்ல விதை கிழங்குகள் கிடைக்காததால், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி குறைந்ததாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...